இந்தியா
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
- சிறப்பு கோர்ட்டு நீதிபதி காவேரி பவேஜா முன் காணொலி காட்சி மூலம் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார்.
- இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளும் கெஜ்ரிவாலை கைது செய்திருந்தனர்.
புதுடெல்லி:
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்தது.
எனவே சிறப்பு கோர்ட்டு நீதிபதி காவேரி பவேஜா முன் காணொலி காட்சி மூலம் நேற்று அவர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை 12-ம்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். முன்னதாக இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளும் கெஜ்ரிவாலை கைது செய்திருந்தனர். சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வருகிற 12-ம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.