இந்தியா (National)

தீவிரமாக புதிய வீடு தேடும் அரவிந்த் கெஜ்ரிவால்

Published On 2024-09-28 07:17 GMT   |   Update On 2024-09-28 07:17 GMT
  • முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் முதல்வருக்கான வீட்டை காலி செய்ய உள்ளார்.
  • மக்களை சந்திக்கும் வகையில் தொகுதி அருகிலேயே வீடு பார்த்து வருகிறார்.

டெல்லி மாநில முதல்வராக இருந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் இவருக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து கைது செய்தது.

திகார் சிறையில் அடைக்கப்பட்ட கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்க, ஜெயிலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ஜெயிலில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், மக்கள் தன்னை கலங்கமற்றவர் எனக் கூறும்வரை முதல்வர் பதவியை ஏற்கமாட்டேன் என தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அதிஷி புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

இதனால் கெஜ்ரிவால் பிளாக்ஸ்டாஃப் சாலையில் உள்ள அலுவலக வீட்டை காலியும் செய்யும் நிலையில் உள்ளார். நவராத்திரி காலம் அடுத்த மாதம் தொடக்கத்தில் தொடங்க இருக்கும் நிலையில் அரசு அலுவலகத்தை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் தொகுதி அமைந்துள்ள பகுதியில் ஆம் ஆத்மி கட்சியினர் தீவிரமாக புதிய வீட்டை தேடிவருகிறார்கள்.

"அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் முதல்வர் அலுவலகத்தை காலி செய்ய இருக்கிறார். இதனால் மிகவும் தீவிரமாக புதிய வீடு தேடப்பட்டு வருகிறது. நியூடெல்லியான அவரது தொகுதி பக்கத்தில் வீடு பார்க்க கெஜ்ரிவால் முன்னுரிமை காட்டுகிறார். அவரது தொகுதி மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது அவரது நோக்கம்" என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுக்கள் தங்களுடைய வீடுகளை அவருக்கு ஒதுக்க முன்வருவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

கெஜ்ரிவால் தனது வயதான பெற்றோர் மற்றும் மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

Tags:    

Similar News