இந்தியா

துப்பாக்கி பாதுகாப்புடன் பள்ளி செல்லும் குழந்தைகள் 

துப்பாக்கி பாதுகாப்புடன் பள்ளி செல்லும் குழந்தைகள் - காரணம் தெரியுமா?

Published On 2022-09-16 18:58 GMT   |   Update On 2022-09-16 18:58 GMT
  • கேரளாவில் தெருநாய்களின் தொந்தரவு குறித்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது.
  • தெருநாய்களுக்கு உணவு கொடுப்பவரே அதனால் கடிபடும் நபருக்கான மருத்துவச் செலவை ஏற்க வேண்டும் என உத்தரவிட்டது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் சமீபகாலமாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. நடந்து செல்பவர்கள் மட்டுமின்றி, வாகனங்களில் செல்வோரையும் விரட்டி கடிக்கின்றன.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்ய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தெருநாய்களைக் கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவும், ரேபிஸ் வைரஸ் தொற்றுள்ள நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். மேலும், தெருநாய்களுக்கு உணவு கொடுப்பவரே அதனால் கடிபடும் நபருக்கான மருத்துவச் செலவை ஏற்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்நிலையில், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள பேக்கல் என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் பள்ளிக் குழந்தைகளை துப்பாக்கி ஏந்தியபடி அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் பள்ளிக்குச் செல்லவே குழந்தைகள் பயப்படுகின்றனர். குழந்தைகளைப் பாதுகாக்கவே இந்த ஏர் கன் துப்பாக்கியை ஏந்தியபடி மாணவியரை அழைத்துச் செல்கிறேன் என தெரிவித்தார்.

Tags:    

Similar News