இந்தியா

ஆதார் எண் இணைக்காதவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கமா?: மத்திய சட்ட மந்திரி விளக்கம்

Published On 2023-04-07 01:54 GMT   |   Update On 2023-04-07 01:54 GMT
  • வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை.
  • காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

புதுடெல்லி :

மாநிலங்களவை கேள்வி நேரத்தில், மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ கூறியதாவது:-

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. அதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆதார் எண் அளிப்பதற்கான கால அவகாசம், அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இணைக்காதவர்களின் பெயர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படமாட்டாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மற்றொரு கேள்விக்கு கிரண் ரிஜிஜூ அளித்த பதில் வருமாறு:-

மத்திய சட்ட அமைச்சகத்தின் கீழ் உள்ள சட்டமியற்றும் துறை, மசோதா உருவாக்கும் பணியை எளிமையாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மசோதாவை உருவாக்குவதில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் மூத்த வக்கீல்களின் உதவியை பெறும் திட்டம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநிலங்களவை கேள்வி நேரத்தில் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷன் ரெட்டி கூறியதாவது:-

கொரோனாவுக்கு முன்பு, கடந்த 2019-ம் ஆண்டில் 1 கோடியே 9 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வந்தனர். கொரோனாவுக்கு பிறகு, 2021-ம் ஆண்டில் 15 லட்சத்து 20 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், 2022-ம் ஆண்டில் 61 லட்சத்து 90 ஆயிரம் பேரும் வந்தனர்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக 24 மணி நேரமும் 12 உள்நாட்டு மொழிகளிலும், 10 சர்வதேச மொழிகளிலும் செயல்படும் உதவிமைய எண்ணை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News