இதயத்தில் கத்தியோடு 6 நாளாக துடிதுடித்த நபர்.. மெடிக்கல் மிராக்கிள் நிகழ்த்திய மருத்துவர்கள்
- மருத்துவர்கள் சோதித்ததில் தினேஷின் இதயத்தில் கத்தி முழுமையாக சிக்கியிருப்பதை கண்டுபிடித்தனர்.
- கத்தியை நேரடியாக அகற்றினால் அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டு நோயாளி உயிரிழக்க நேரிடும்.
அரியானாவில் உள்ள சோனிபட்டில் வசிக்கும் தினேஷ் என்பவருக்கு அக்டோபர் 16ஆம் தேதி சிலருடன் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது தினேஷின் இதயத்தில் கத்தி குத்தியுள்ளது. அந்த கத்தியின் கைப்பிடி உடைந்து விட்டதால் அந்த கத்தியை வெளியே எடுக்க முடியாததால் தினேஷ் வலியால் துடித்துள்ளார்.
உடனே தினேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சோதித்ததில் தினேஷின் இதயத்தில் கத்தி முழுமையாக சிக்கியிருப்பதை கண்டுபிடித்தனர். இத்தகைய சூழ்நிலையில் கத்தியை நேரடியாக அகற்றினால் அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டு நோயாளி உயிரிழக்க நேரிடும்.
ஆதலால் இன்று (அக்டோபர் 22) அரிதான இதய அறுவை சிகிச்சை செய்து நோயாளியை காப்பாற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி மருத்துவர்கள் நோயாளியின் இதயத்திற்கு அருகில் உள்ள சவ்வை கவனமாக திறந்து, கத்தியை அகற்றி, வலது ஏட்ரியல் அறையை சரி செய்தனர். நோயாளியின் நுரையீரலையும் வெற்றிகரமாகச் சரிசெய்தனர். இந்த சிக்கலான அறுவை சிகிச்சை மூன்று முதல் நான்கு மணி நேரம் நடைபெற்றது.
இதயத்தில் கத்தி குத்தி 6 நாட்களுக்கு பிறகு நடந்த அறுவை சிகிச்சைக்கு பின்தினேஷ் உடல் நலம் தேறி வருவதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.