இந்தியா (National)

மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் லாரன்ஸ் பிஷ்னோய்?..

Published On 2024-10-23 10:29 GMT   |   Update On 2024-10-23 11:26 GMT
  • குஜராத் சபர்மதி சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் உள்ளே இருந்தவாறே குற்றச்செயலைகளை அரங்கேற்றி வருகிறார்.
  • எங்கள் கட்சி மகாராஷ்டிராவில் உள்ள உ.பி. பஞ்சாப், அரியானா, ஜார்கண்ட், உத்தரகாண்ட் மக்களுக்காக போராடும்.

மகாராஷ்டிராவில் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் முக்கிய தலைவர் பாபா சித்திக் கடந்த அக்டோபர் 12 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் ரவுடி கும்பல் பொறுப்பேற்றுள்ளது.

பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்யத் துடிக்கும் இந்த கும்பல் அவருக்கு உதவும் யாராக இருந்தாலும் பாபா சித்திக் நிலைதான் என்று எச்சரிக்கை விடுத்தது. எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது குஜராத் சபர்மதி சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் உள்ளே இருந்தவாறே குற்றச்செயலைகளை அரங்கேற்றி வருகிறார்.

அவரை என்கவுண்டர் செய்யும் போலீஸ்காரருக்கு ரூ.1.11 கோடி பரிசு தருவதாக கர்னி சேனா அறிவித்தது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் புதிதாக உதயமாகியுள்ள உத்தர்பாரதிய விகாஸ் சேனா [யுபிவிஎஸ்] கட்சி லாரன்ஸ் பிஷ்னோய் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய அந்த அமைப்பின் தலைவர் சுக்லா, நாங்கள் உங்களில் [லாரன்ஸ் பிஷ்னோய்] மாவீரர் பகத் சிங்கை பார்க்கிறோம்.எங்கள் கட்சி மகாராஷ்டிராவில் உள்ள உ.பி. பஞ்சாப், அரியானா, ஜார்கண்ட், உத்தரகாண்ட் மக்களின் நல்வாழ்வுக்காகப் போராடும் என்றும் லாரன்ஸ் பிஸ்னோய் தேர்தலில் போட்டியிட தங்கள் கட்சி சார்பில் சீட் தருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

வரும் நவம்பர் 20 ஆம் தேதி மகாராஷ்டிர தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தங்கள் மகனுக்கு என்றும் பக்கபலமாக இருப்போம் என்று பஞ்சாபில் உள்ள  லாரன்ஸ் பிஷ்னோய் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News