ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரம்: சத்தீஸ்கரை சேர்ந்த வழக்கறிஞர் கைது
- போன் கால் மூலம் பேசிய அந்த மர்ம நபர் ரூ.50 லட்சம் கேட்டும் மிரட்டல் விடுத்திருந்தார்.
- கொலை மிரட்டல் விடுத்தவரைக் கைது செய்துவிட்டோம் என்று இன்று காலை போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் பிரபலங்களுக்குக் கொலை மிரட்டல்கள் அதிகரித்து வருகிறது. மும்பையில் சிவசேனா தலைவர் பாபா சித்திக் கொலைக்கு பின்னர் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வந்ததால் அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
படப்பிடிப்பிலும் உச்சக்கட்ட பாதுகாப்புடனே அவர் வளம் வருகிறார். இந்நிலையில் பாலிவுட் திரையுலகின் உச்ச நட்சத்திரம் ஷாருக் கானுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொலை மிரட்டல் வந்தது. மேலும் போன் கால் மூலம் பேசிய அந்த மர்ம நபர் ரூ.50 லட்சம் கேட்டும் மிரட்டல் விடுத்திருந்தார்.
இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மும்பை பந்த்ரா பகுதி போலீஸ் மிரட்டல் விடுத்தவரை வலை வீசி தேடி வந்தது. இந்நிலையில் ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரைக் கைது செய்துவிட்டோம் என்று இன்று காலை போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் நகரில் வசித்து வந்த முகமது பைசான் கான் என்ற வழக்கறிஞர்தான் மிரட்டல் விடுத்ததாக அவரது வீட்டில் வைத்து போலீஸ் அவரை கைது செய்துள்ளது. மிரட்டலுக்கு பய்னபடுத்தப்பட்ட தனது செல்போன் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி அவர் போலீசில் புகார் அளித்திருந்ததும் தெரிய வந்துள்ளது.