இந்தியா

'லவ் ஜிகாத்' குற்றத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்க உ.பி. அரசு முடிவு

Published On 2024-07-30 09:58 GMT   |   Update On 2024-07-30 09:58 GMT
  • லவ் ஜிகாத் சட்டத்தில் திருத்தம் செய்ய உத்தரபிரதேச பாஜக முடிவு செய்துள்ளது.
  • லவ் ஜிகாத்' குற்றத்திற்கான அபராத தொகை 5 லட்சமாக உயர்த்தப்படும்.

லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்து பெண்கள் திருமணத்தின் மூலம் மதம் மாற்றப்படுவதாக பாஜகவினர் பல ஆண்டுகளாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதற்கிடையே, பா.ஜ.க. ஆட்சி புரியும் உத்தரபிரதேசத்தில் லவ் ஜிகாத்திற்கு எதிராக 2021 ஆம் ஆண்டு யோகி அரசு சட்டம் இயற்றியது.

இந்த சட்டப்படி, ஒருவரை திட்டமிட்டு காதலித்து, பின் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து திருமணம் செய்தால், அந்த திருமணம் செல்லாது என்றும் அவ்வாறு திருமணம் செய்தவரை ஜாமீனில் வரமுடியாத சட்டப்பிரிவின் கீழ் கைது செய்து 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 50,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

இந்நிலையில் லவ் ஜிகாத் சட்டத்தில் திருத்தம் செய்ய உத்தரபிரதேச பாஜக முடிவு செய்துள்ளது.

உத்தரபிரதேசம் மதமாற்றதடைச்சட்டம் 2024 என்று முன்மொழியப்படவுள்ள இந்த சட்ட திருத்தத்தை சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சர் சுரேஷ் கன்னா உத்தரபிரதேச சட்டசபையில் இன்று அறிமுகம் வைத்தார்.

இந்த புதிய சட்டத்திருத்தத்தின்படி 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை 20 ஆண்டுகளாக உயர்த்தப்படும். அபராத தொகை 50,000 ரூபாயில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும்.

லவ் ஜிகாத் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோர் புகார் கொடுத்தால் தான் வழக்குப்பதிவு செய்யப்படும். தற்போது அந்த வரம்பை தளர்த்தி யார் புகார் கொடுத்தாலும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று இந்த சட்ட திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News