இந்தியா

லவ்லி மோள் அச்சம்மா.

அபுதாபியில் நடந்த லாட்டரி குலுக்கல்: கேரள நர்சுக்கு ரூ.45 கோடி பரிசு

Published On 2023-06-05 05:44 GMT   |   Update On 2023-06-05 05:44 GMT
  • குடும்பத்துடன் வசித்து வரும் லவ்லி மோள் அச்சம்மா, அபுதாபியில் வெளியிடப்படும் லாட்டரி சீட்டு வாங்குவது வழக்கம்.
  • பணத்தை குழந்தைகளின் எதிர்காலத்திற்கும், அவர்களின் கல்விக்கும் செலவளிப்பேன், என்றார்.

திருவனந்தபுரம்:

கேரளாவை சேர்ந்தவர் லவ்லி மோள் அச்சம்மா. இவர் வளைகுடா நாடான அபுதாபியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். அங்கேயே குடும்பத்துடன் வசித்து வரும் லவ்லி மோள் அச்சம்மா, அபுதாபியில் வெளியிடப்படும் லாட்டரி சீட்டு வாங்குவது வழக்கம்.

இவர் சமீபத்தில் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கி இருந்தார். இதன் குலுக்கல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதல் பரிசான ரூ.45 கோடி நர்சு லவ்லி மோள் அச்சம்மாவுக்கு கிடைத்தது. இதனை அறிந்த அவர் மகிழ்ச்சியில் திளைத்தார். பரிசு கிடைத்தது பற்றி அவர் கூறியதாவது:-

ஒவ்வொரு மாதமும் எனது கணவர் தான் லாட்டரி சீட்டு வாங்குவார். இம்முறை நான் லாட்டரி சீட்டை வாங்கி இருந்தேன். அதற்கு முதல் பரிசு விழுந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பணத்தில் எனது மைத்துனருக்கும் பங்கு கொடுப்பேன்.

மேலும் அந்த பணத்தில் ஒரு பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்குவேன். மீதி பணத்தை குழந்தைகளின் எதிர்காலத்திற்கும், அவர்களின் கல்விக்கும் செலவளிப்பேன், என்றார். 

Tags:    

Similar News