இந்தியா

தண்டவாளத்தில் இருந்த கேஸ் சிலிண்டர்... ரெயிலை கவிழ்க்க சதியா?

Published On 2024-09-22 07:49 GMT   |   Update On 2024-09-22 07:49 GMT
  • கேஸ் சிலிண்டர் இருப்பதைக் கவனித்த ஓட்டுநர், உடனடியாக பிரேக் போட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
  • உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற சம்பவம் நடப்பது ஒன்றும் புதிதல்ல.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து பிரயாக்ராஜ் நோக்கி லூப் லைன் வழியாக சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் 5 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர் இருப்பதைக் கவனித்த ஓட்டுநர், உடனடியாக பிரேக் போட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற சம்பவம் நடப்பது ஒன்றும் புதிதல்ல.

செப்டம்பர் 9ம் தேதி கான்பூர்-காஸ்கஞ்ச் வழித்தடத்தில் பயணித்த காளிந்தி எக்ஸ்பிரஸ் தண்டவாளத்தில் இருந்து கேஸ் சிலிண்டருடன் மோதியது. இதைத் தொடர்ந்து பலத்த வெடிப்புச் சத்தம் கேட்டதால், ரெயிலின் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார்.

இதனையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தண்டவாளம் அருகே எல்பிஜி சிலிண்டர், பெட்ரோல் பாட்டில் மற்றும் தீப்பெட்டி ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

Tags:    

Similar News