இந்தியா

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

Published On 2024-05-20 05:14 GMT   |   Update On 2024-05-20 06:20 GMT
  • சையத் இப்ராஹிம் ரைசி மறைவால் ஆழ்ந்த வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்.
  • இந்தியா - ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்.

புதுடெல்லி:

ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார். அவருடன் சென்றவர்களும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என ஈரான் தகவல் தெரிவித்துள்ளது. 

 இப்ராஹிம் ரைசி

இதையடுத்து முகமது முக்பர் ஈரான் நாட்டின் புதிய அதிபராகிறார். ஈரான் நாட்டின் புதிய காபந்து அதிபராக துணை அதிபர் முகமது முக்பர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.

இந்நிலையில் ஈரான் அதிபர் சையத் இப்ராஹிம் ரைசி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில்,

சையத் இப்ராஹிம் ரைசி மறைவால் ஆழ்ந்த வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன். இந்தியா - ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்.

சையத் இப்ராஹிம் ரைசியின் குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் துணை நிற்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News