இந்தியா (National)

தடையை மீறி கோவிலின் கருவறைக்குள் நுழைந்த முதல்வரின் மகன்

Published On 2024-10-19 03:27 GMT   |   Update On 2024-10-19 03:27 GMT
  • ஆண்டு முழுவதும் எராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
  • விசாரணை நடத்த மத்திய பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள மகாகாலேஸ்வரர் கோவிலின் கருவறைக்குள் மகாராஷ்டிரா முதல்வரின் மகன் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உஜ்ஜைனியில் உள்ள மகாகாலேஸ்வரர் கோவிலானது சிவனைக் குறிக்கும் 12 ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்றாகும். இந்த புகழ்பெற்ற கோவிலுக்கு ஆண்டு முழுவதும் எராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனிடையே கடந்த ஓராண்டாக கருவறைக்குள் பக்தர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே. இவர் கல்யாண் தொகுதி எம்.பி.யாக உள்ளார். இவர் நேற்றுமுன்தினம் குடும்பத்துடன் உஜ்ஜைனி கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது ஸ்ரீகாந்தும் அவரது மனைவி மற்றும் இரண்டு பேர் தடை செய்யப்பட்ட கோவிலின் கருவறைக்குள் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இச்சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த மத்திய பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

Similar News