இந்தியா

வாக்களித்தால் திருமணம் செய்து வைப்பேன்.. வேட்பாளரின் 'அடடே' தேர்தல் வாக்குறுதி..!

Published On 2024-11-07 15:47 GMT   |   Update On 2024-11-07 15:47 GMT
  • திருமணம் ஆகாத இளஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி.
  • முக்கிய போட்டியாளராக அம்மாநிலத்தின் விவசாயத்துறை அமைச்சர் தனஞ்சய் முண்டே போட்டியிடுகிறார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் மராத்வாடா பகுதியில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஒருவர், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், தனது தொகுதியில் உள்ள திருமணம் ஆகாத இளஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி தொகுதியில் போட்டியிடும் ராஜேசாகேப் தேஷ்முக் அளித்த புது வகை வாக்குறுதி, கிராமப்புறங்களில் திருமண வயது ஆன ஆண்களுக்கு மணமகள் கிடைக்கவில்லை என்ற பிரச்சினையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

நவம்பர் 20 ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் தேஷ்முக்கின் முக்கிய போட்டியாளராக அம்மாநிலத்தின் விவசாயத்துறை அமைச்சர் தனஞ்சய் முண்டே, துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தலைவர் போட்டியிடுகிறார்.

பிரசாரத்தின் போது பேசிய சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராஜாசாகேப் தேஷ்முக், "நான் சட்டமன்ற உறுப்பினர் ஆனால், நான் திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பேன். நாங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்போம். திருமணம் செய்ய விரும்பும் ஆணுக்கு வேலை உள்ளதா, வியாபாரம் செய்கிறாரா என்று கேட்கின்றனர். அமைச்சர் தனஞ்சய் முண்டேவுக்கே வியாபாரம் இல்லையெனில், உங்களுக்கு என்ன கிடைத்துவிட போகிறது," என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News