லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டது: அன்னா ஹசாரேயிடம் தெரிவித்த மராட்டிய முதல்வர்
- ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து அனைவரது பார்வையையும் பெற்றவர் அன்னா ஹசாரே.
- லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர முக்கிய காரணமாக இருந்தவர் என்றால் மிகையாகாது.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி பா.ஜனதா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி செய்து வருகிறது.
மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்தில் இரு அவைகள் உள்ளன. மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களை கொண்ட சபை ஒன்று. மற்றொரு மேல்சபை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டசபையில் ஏற்கனவே லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டு விட்டது.
இந்த நிலையில் நேற்று மேல்சபையில் இந்த மசோதா நிறைவேறியது. இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக் நாத் ஷிண்டே சமூக ஆர்வலரும், ஊழலுக்கு எதிராக போராடியவருமான அன்னா ஹசாராவை போன் மூலம் தொடர்பு கொண்டு, இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
லோக் ஆயுக்தா வரம்பிற்குள் முதலமைச்சர் மற்றும் மந்திரிகள் அடங்குவர். லோக் ஆயுக்தா அதிகாரி ஒருவரை நியமித்தபின் அவரை மாற்றவோ இடமாற்றமோ செய்ய முடியது. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிதான் நீக்க முடியும்.
அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு எதிரான ஊழல் குறித்த புகார்களை விரைவாக விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.
மத்திய அரசு லோக் ஆயுக்தா மசோதாவை அமல்படுத்த அன்னா ஹசாரே நீண்ட நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியை இழக்க இவரது போராட்டம் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது. மேலும், இவருடன் உண்ணாவிரதம் இருந்து கெஜ்ரிவால் தனியாக சென்று கட்சி ஆரம்பித்து டெல்லி முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். பஞ்சாப் மாநிலத்திலும் கெஜ்ரிவாலிடம் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.