இந்தியா

மகாராஷ்டிரா மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்: சரத் பவார்

Published On 2024-11-07 06:33 GMT   |   Update On 2024-11-07 06:33 GMT
  • மகாராஷ்டிரா மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதற்கு ஏற்ப நாங்கள் பணியாற்றி மக்களுக்கு நம்பிக்கை கொடுப்பது அவசியம்.
  • மகாராஷ்டிராவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடக்கும். 50 சதவீதம் ஒதுக்கீடு என்ற சுவர் உடைக்கப்படும்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற 20-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணிக்கு மகா விகாஸ் அகாடி என்று பெயர்.

மகா விகாஸ் அகாடி தேர்தலுக்கான பிரசாரத்தை நேற்று தொடங்கியதாக குறிப்பிட்ட சரத் பவார், இன்று மூன்று இடங்களில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேச இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மகாராஷ்டிர மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சரத் பவார் கூறியதாவது:-

மகாராஷ்டிரா மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதற்கு ஏற்ப நாங்கள் பணியாற்றி மக்களுக்கு நம்பிக்கை கொடுப்பது அவசியம். இன்று முதல் நான், கூட்டணியைச் சேர்ந்த அனைவரும் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்த அதற்கான பணியை மேற்கொள்ள இருக்கிறோம். மகாராஷ்டிராவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடக்கும். 50 சதவீதம் ஒதுக்கீடு என்ற சுவர் உடைக்கப்படும். ராகுல் காந்தி சொல்வது போன்று நடந்தால் அதிகரிக்கப்படும்.

இவ்வாறு சரத் பவார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News