இந்தியா (National)

பாராளுமன்றத்தில் வண்ண புகை குண்டுவீச்சு: 6வது நபருக்கு 7 நாள் காவல்

Published On 2023-12-16 11:59 GMT   |   Update On 2023-12-16 11:59 GMT
  • பாராளுமன்றத்தின் மக்களவையில் வண்ண புகை குண்டுகளை வீசிய சம்பவம் நாட்டையே உலுக்கியது.
  • இது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு என எதிர்க்கட்சிகள் மத்திய அரசுமீது குற்றம்சாட்டி வருகிறது.

புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து எம்.பி.க்கள் இருக்கும் இடத்திற்குள் திடீரென 2 பேர் குதித்தனர். அவர்கள் இருவரும் அங்கு வண்ண புகை குண்டுகளை வீசினர். இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது.

அதிக பாதுகாப்பு நிறைந்த இடத்திற்குள் அவர்கள் எவ்வாறு சென்றனர், இது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு என எதிர்க்கட்சிகள் மத்திய அரசுமீது குற்றம்சாட்டி வருகிறது.

பரிந்துரை பாஸ் வழங்கிய பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பாராளுமன்றத்தில் வண்ண புகை குண்டுகளை வீசியதில் தொடர்புடைய 6வது நபரான மகேஷ் குமாவத் இன்று கைது செய்யப்பட்டார்.

அவரை பாட்டியாலா நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை 7 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags:    

Similar News