இந்தியா

உங்கள் மகன் அரசியல்வாதியை விட முக்கிய பதவி வகிக்கிறார்: அமித்ஷாவை வாழ்த்திய மம்தா பானர்ஜி

Published On 2024-08-29 14:54 GMT   |   Update On 2024-08-29 14:54 GMT
  • ஐ.சி.சி.யின் புதிய தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
  • டிசம்பர் 1-ம் தேதி அவர் பொறுப்பு ஏற்க இருப்பதாக ஐ.சி.சி. அதிகாரபூர்வமாக தெரிவித்தது.

கொல்கத்தா:

ஐ.சி.சி. தலைவராக நியூசிலாந்தின் கிரேக் பார்கிளே இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.

இதையடுத்து ஐ.சி.சி.யின் தலைவர் பதவிக்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. நேற்று முன்தினம் இதற்கான கடைசி நாளாகும். பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.

அவரைத் தவிர வேறு யாரும் போட்டியிடவில்லை என்பதால், ஐ.சி.சி.யின் புதிய தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். டிசம்பர் 1-ம் தேதி அவர் பொறுப்பு ஏற்க இருப்பதாக ஐ.சி.சி. அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

இதன்மூலம் ஐ.சி.சி. தலைவராக பதவி ஏற்கும் குறைந்த வயது நிர்வாகி என்ற பெருமையை ஜெய்ஷா பெற்றுள்ளார். அவருக்கு இந்திய வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஐ.சி.சி. தலைவராக ஜெய்ஷா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, மம்தா பானர்ஜி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய உள்துறை மந்திரிக்கு வாழ்த்துகள். உங்கள் மகன் அரசியல்வாதி ஆகவில்லை. ஆனால், அதைவிட மிக முக்கிய பதவியான ஐ.சி.சி. தலைவராகி உள்ளார். உங்கள் மகன் மிகவும் சக்தி வாய்ந்தவராகிவிட்டார். அவரின் இந்த உயர்ந்த சாதனைக்கு உங்களை வாழ்த்துகிறேன், சபாஷ் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News