இந்தியா

மோடி வருத்தப்படுவார் என மம்தா பயப்படுகிறார்: காங்கிரஸ் விமர்சனம்

Published On 2024-03-11 04:34 GMT   |   Update On 2024-03-11 04:34 GMT
  • இந்தியாவின் எந்த ஒரு அரசியல் கட்சியும் தன்னைப் போன்ற தலைவரை நம்பக்கூடாது என்பதை மம்தா பானர்ஜி நிரூபித்துள்ளார்.
  • இந்தியா கூட்டணியில் தொடர்ந்து இருந்தால், பிரதமர் மோடி மகிழ்ச்சியாக இருக்கமாட்டார் என மம்தா பானர்ஜி பயப்படுகிறார்.

மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள 42 இடங்களில் 2 இடங்களை மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க மம்தா பானர்ஜி முடிவு செய்தார். ஆனால், காங்கிரஸ் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட போவதில்லை என மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்தியா கூட்டணியில் இரு கட்சிகளும் இருக்கின்றன. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என காங்கிரஸ் கட்சி தெரிவித்து வந்தது. கடந்த மாதம் இறுதியில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இரு கட்சிகளும் தயாராக இருக்கின்றன என தகவல் வெளியானது.

ஆனால், தனது முடிவில் மம்தா உறுதியாக உள்ளார் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. இந்த நிலையில்தான் நேற்று 42 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் காங்கிரஸ்- திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையில் மேற்கு வங்காள மாநிலத்தில் கூட்டணி இல்லை என முடிவானது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில் "மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு செய்து கொள்ள விருப்பமாக உள்ளோம் என தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.

ஜெய்ராம் ரமேஷ்

பேச்சுவார்த்தை மூலம் இறுதி கட்டத்தை எட்டி ஒப்பந்தம் மேற்கொள்ளும முறையை காங்கிரஸ் கட்சி கடைபிடித்து வருகிறது. தனிப்பட்ட முறையில் ஒருதலைபட்சமாக அறிவிப்பு ஏதும் வெளியிடுவதில்லை. பா.ஜனதாவுக்கு எதிராக இந்தியா கூட்டணி ஒன்றாக போட்டியிடுவதைத்தான் காங்கிரஸ் கட்சி எப்போதும் விரும்புகிறது" என்றார்.

மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவரும், மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்திரி கூறுகையில் "இந்தியாவின் எந்த ஒரு அரசியல் கட்சியும் தன்னைப் போன்ற தலைவரை நம்பக்கூடாது என்பதை மம்தா பானர்ஜி நிரூபித்துள்ளார்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

இந்தியா கூட்டணியில் தொடர்ந்து இருந்தால், பிரதமர் மோடி மகிழ்ச்சியாக இருக்கமாட்டார் என மம்தா பானர்ஜி பயப்படுகிறார். இந்தியா கூட்டணியில் இருந்து அவர் பிரிந்து தனியாக போட்டியிடுவதன் மூலம், என்னுடைய மனவருத்தத்துடன் இருக்க வேண்டாம், நான் பா.ஜனதாவுக்கு எதராக போட்டியிடும் அணியில் இல்லை என்ன செய்தியை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளார்" என்றார்.

Tags:    

Similar News