இந்தியா

மேற்கு வங்காள அரசியலில் பரபரப்பு: பா.ஜ.க. எம்.பி.யை சந்தித்த மம்தா

Published On 2024-06-18 12:28 GMT   |   Update On 2024-06-18 12:28 GMT
  • பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காள மாநிலத்தில் பா.ஜ.க. 12 இடங்களில் வெற்றி பெற்றது.
  • புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பா.ஜ.க. எம்.பி.க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என திரிணாமுல் கூறியது.

கொல்கத்தா:

பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காள மாநிலத்தில் பா.ஜ.க. 12 இடங்களில் வெற்றி பெற்றது.

சமீபத்தில் நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளரான அபிஷேக் பானர்ஜி,

வங்காளத்தில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பா.ஜ.க. எம்.பி.க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் எங்களுடன் இணைவார்களா இல்லையா என்பது குறித்து நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரிவித்தார்.

இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரியான மம்தா பான்ர்ஜி இன்று கூச் பெஹார் பகுதிக்கு வருகை தந்தார். அப்போது அங்குள்ள மதன் மோகன் கோவிலில் மம்தா பானர்ஜி சாமி தரிசனம் செய்தார்.

கிரேட்டர் கூச் பெஹார் மக்கள் இயக்க தலைவர் மற்றும் பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி.யான அனந்த மகாராஜை மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று சந்தித்தார். அப்போது அங்கு குழுமியிருந்த மக்களைப் பார்த்து கையசைத்தபடி சென்றார்.

மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் 3 பேர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Tags:    

Similar News