இந்தியா
மோடி பதவியேற்பின் போது இருட்டு அறையில் அமர்ந்த மம்தா - வெளியான பகீர் காரணம்
- கிட்டத்தட்ட வாரணாசியை இழந்துவிட்டார்கள், அயோத்தியில் தோற்றுவிட்டார்கள்.
- ஒட்டுமொத்தமாக பிரசாரம் செய்தும் பெரும்பான்மையை பெறமுடியவில்லை.
திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி, பிரதமராக மோடி பதவியேற்ற ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் உள்ள அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு இருளில் அமர்ந்திருந்ததாக அக்கட்சியின் எம்பி சகரிகா கோஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சகரிகா கோஸ் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் பிரதமர் பதவிக்கு கொண்டு வரப்படுகிறார் என்று மம்தா பானர்ஜி அதிருப்தியில் இருந்தார். இதனால் பிரதமர் மோடி பதவியேற்ற போது, நாட்டின் ஒரே ஒரு பெண் முதல்வர் மம்தா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
கிட்டத்தட்ட வாரணாசியை இழந்துவிட்டார்கள், அயோத்தியில் தோற்றுவிட்டார்கள். ஒட்டுமொத்தமாக பிரசாரம் செய்தும் பெரும்பான்மையை பெறமுடியவில்லை. மோடியை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.