மம்தா பானர்ஜியின் விலை ரூ10 லட்சம்: இழிவாக பேசிய பாஜக வேட்பாளர் அபிஜித்
- மம்தா பானர்ஜி, என்ன விலைக்கு உங்களை விற்கிறீர்கள்?
- மம்தா பானர்ஜி ஒரு பெண்தானா? என்ற கேள்வி அடிக்கடி எனக்குள் எழுகிறது.
2018 முதல் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அபிஜித் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்கள் முன் ராஜினாமா செய்தார்.
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து விலகிய அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் சேர்ந்தார்.
பாஜகவில் சேர்ந்த அபிஜித் தம்லுக் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
இந்நிலையில் மே 15 அன்று நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அபிஜித், "மம்தா பானர்ஜி, என்ன விலைக்கு உங்களை விற்கிறீர்கள்? உங்கள் விலை ₹10 லட்சம். ஏனென்றால் நீங்கள் மேக் அப் போடுகிறீர்கள். மம்தா பானர்ஜி ஒரு பெண்தானா? என்ற கேள்வி அடிக்கடி எனக்குள் எழுகிறது" என்று இழிவாக பேசியுள்ளார்.
இதன் அடிப்படையில், பாஜக வேட்பாளரான அபிஜித் கங்கோபாத்யாய் தேர்தல் பரப்புரை செய்ய 24 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று மாலை 5 மணியிலிருந்து இந்த தடை அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அபிஜித் போட்டியிடும் தம்லுக் தொகுதிக்கு வரும் 25ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது.