இந்தியா

தெருநாய்களுக்கு உணவளித்த இளம்பெண் மீது தாக்குதல்

Published On 2024-05-17 05:26 GMT   |   Update On 2024-05-17 05:26 GMT
  • மனிஷா சோலங்கி கடந்த 14-ம் தேதி ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டார்.
  • விசாரணையில் மனிஷாவை தாக்கிய சோனு நாய்களைத் தாக்கியதும் தெரிந்தது.

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியின் ரகுபீர் நகரில் தெரு விலங்குகளை பராமரிக்கும் இளம்பெண் மனிஷா சோலங்கி கடந்த 14-ம் தேதி ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டார்.

மனிஷா கிட்டத்தட்ட 150 தெருநாய்களுக்கு உணவளித்துக் கொண்டிருந்தபோது, அருகில் உள்ள கடையில் பணிபுரியும் ஒருவர் அவரை தாக்கினார். இச்சம்பவம் வீடியோவில் படம்பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

மனிஷா இன்ஸ்டாகிராமில் நடந்த சம்பவத்தை விவரித்தார். அதில், பாதுகாப்பற்ற விலங்குகளுக்கு எதிரான கொடுமையை எடுத்துக் காட்டினார். நாய்களைப் பாதுகாக்க முயன்றபோது தன்னைத் தாக்கியதையும் வெளிப்படுத்தினார். நாங்கள் மோசமாக அடிக்கப் பட்டோம். யாரும் எங்களுக்கு உதவவில்லை, எங்களுக்கு ஆதரவாக யாரும் நிற்கவில்லை என தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக, மனிஷாவின் தாயார் சோனு மீது போலீசில் புகார் செய்தார். போலீசார் சோனு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் மனிஷாவை தாக்கியது சோனு என்பதும், நாய்களை தாக்கியதும் தெரியவந்தது. இதுதொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News