இந்தியா

உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்தை அறிமுகம் செய்து வைத்தார் மத்திய மந்திரி

Published On 2023-01-26 16:18 GMT   |   Update On 2023-01-26 16:18 GMT
  • அரசுகளுக்கு ரூ.325, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.800 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • விரைவில் தனியார் மருத்துவமனைகளில் மருந்து விற்பனை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி:

மூக்கு வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்தான இந்த மருந்துக்கு இன்கோவேக் என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பும் ஒப்புதல் வழங்கியதையடுத்து, குடியரசு தினமான இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் இந்த தடுப்பு மருந்தை அறிமுகம் செய்து வைத்தனர்.

இந்த மருந்து அரசுக்கு ரூ.325 என்ற விலையிலும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.800 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகளை வாங்குவதற்காக தனியார் மருத்துவமனைகள் முன்கூட்டியே ஆர்டர் செய்திருப்பதால், விரைவில் தனியார் மருத்துவமனைகளில்  இந்த மருந்து பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News