இந்தியா (National)

வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் உடல்களை தோளில் சுமந்து சென்று இறுதி மரியாதை செய்த அமைச்சர்

Published On 2024-10-20 09:57 GMT   |   Update On 2024-10-20 09:57 GMT
  • இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களில் 2 பேர் உயிரிழந்தனர்.
  • சத்தீஷ்காரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நக்சலைட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்புப் படை, இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்புப் படை மற்றும் போலீஸ் அடங்கிய குழுவானது மாநிலத்தின் துபேடா பகுதியில் இருந்து நாராயணன்பூருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது, அபுஜ்மத் பகுதியில் உள்ள கொட்லியார் கிராமத்திற்கு அருகே அவர்கள் வந்துகொண்டிருந்தபோது மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த வெடிபொருள் திடீரென வெடித்துச்சிதறியது.

இதில், இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களில் 2 பேர் உயிரிழந்தனர். அவர்கள், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

இந்நிலையில், வீரர்கள் இரண்டு பேரின் உடல்களை அமைச்சர் டேங் ராம் வெர்மா தோளில் சுமந்தபடி சென்று இறுதி மரியாதை செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

சத்தீஷ்காரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நக்சலைட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளே இல்லாத நிலையை உருவாக்குவதற்கான பணியை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News