இந்தியா

'மணிப்பூருக்காக 1 நொடி கூட மோடி செலவிடவில்லை.. மன்னிக்கவே முடியாத தோல்வி' - கார்கே காட்டம்

Published On 2024-09-09 12:55 GMT   |   Update On 2024-09-09 12:55 GMT
  • கடந்த 16 மாதங்களில் மோடி மணிப்பூருக்கு 1 நொடி கூட செலவிடவில்லை.
  • மணிப்பூரைத் தவிர மற்ற மாநிலங்களின் தேர்தல் பேரணிகளில் கலந்துகொண்டு அரசியல் செய்வதில் மோடி மும்முரமாக இருக்கிறார்.

 மணிப்பூருக்காக 1 நொடி கூட மோடி செலவிடவில்லை.. மன்னிக்கவே முடியாத தோல்வி - கார்கே காட்டம்

மணிப்பூரில் பழங்குடி அந்தஸ்து தொடர்பாக மெய்தி மற்றும் குக்கி இனக்குழு மகக்ளுடையிலான மோதல் கலவரமாக வெடித்து 220 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய வன்முறை 16 மாதங்கள் ஆகியும் இன்னும் கட்டுப்படுத்தமுடியாமல் இருந்து வருகிறது.

இதுவரை எந்த தீர்வும் காணப்படாமல் இன்றளவும் கலவரங்கள் தொடர்ந்து வருகின்றன. சுமார் 70,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இரு சமூகத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் மாறி மாறி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் இம்பாலில் ஆளுநர் மாளிகையி முற்றுகை இட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மீண்டும் மணிப்பூரில் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில் பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

கடந்த 16 மாதங்களில் மோடி மணிப்பூருக்கு 1 நொடி கூட செலவிடவில்லை. இன்னும் வன்முறை கட்டுப்படாத முடியாத அளவுக்கு உள்ளது. இவை அனைத்தும் மணிப்பூர் விஷயத்தில் மோடியின் படுதோல்வியையே காட்டுகிறது. மோடியின் மோசமான தோல்வி என்பது மன்னிக்கவே முடியாதது.

 

மணிப்பூர் முதல்வர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். மணிப்பூரில் பாதுகாப்புச் சூழலுக்கு மத்திய அரசு முழு பொறுப்பேற்ப வேண்டும். மணிப்பூர் வன்முறையை விசாரிக்கும் சிபிஐ, என்ஐஏ மற்றும் பிற அமைப்புகளை மோடி அரசு தவறாகப் பயன்படுத்தக்கூடாது.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மணிப்பூரில் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியுள்ளார். மணிப்பூரைத் தவிர மற்ற மாநிலங்களின் தேர்தல் பேரணிகளில் கலந்துகொண்டு அரசியல் செய்வதில் மோடி மும்முரமாக இருக்கிறார். எங்கள் மாநிலத்தில் நிலவும் வன்முறையை நிறுத்த பிரதமர் மோடி ஏன் விரும்பவில்லை? என்பதே மணிப்பூர் மக்களின் கேள்வியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News