உலக நாடுகளை அச்சுறுத்தும் குரங்கு அம்மை: விமான நிலையம், எல்லைகளில் விழிப்புடன் இருக்க உத்தரவு
- முந்தைய குரங்கு அம்மை வைரஸிலிருந்து இது வேறுபட்டது.
- குரங்கு அம்மை இந்தியாவை பாதிக்கும் வாய்ப்பு குறைவு.
மத்திய ஆப்பிரிக்காவில் மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு காங்கோ ஜனநாயகக் குடியரசில் மங்கி பாக்ஸ் பரவ தொடங்கியது. இதுவரை சுமார் 450க்கும் மேற்பட்டோர் மங்கி பாக்ஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் குரங்கு அம்மை நோய் பரவல் அதிகரித்து வருவதால், விமான நிலையம், துறைமுகங்கள் மற்றும் எல்லை அதிகாரிகளை விழிப்புடன் இருக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைகளை கண்காணிக்க அதிகாரிகளை எச்சரித்துள்ளனர்.
மத்திய மருத்துவமனைகளான சப்தர்ஜங் மருத்துவமனை, ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை மற்றும் லேடி ஹார்டிங்கே மருத்துவமனைகளில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில்,
மத்திய சுகாதார அமைச்சகம் புதிய வைரஸ் குறித்து நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியது. முந்தைய குரங்கு அம்மை வைரஸிலிருந்து இது வேறுபட்டது.
மாநிலங்கள் மற்றும் நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையத்துடன் (NCDC) ஆலோசனை நடத்தினோம். கொரோனா வைரசுடன் குரங்கு அம்மைக்கு எந்த தொடர்பும் இல்லை.
நோடல் அதிகாரிகள் ஏற்கனவே மருத்துவமனைகளில் உள்ளனர். சோதனை 32 ICMR மையங்களில் குரங்கு அம்மையின் அறிகுறிகள் சிக்கன் பாக்ஸை போன்றது.
இறப்புக்கான வாய்ப்புகள் அதிகம் ஆனால் அவை இந்தியாவை பாதிக்கும் வாய்ப்பு குறைவு என்று தெரிவித்தனர்.