இந்தியா

தொழிலதிபர் மனைவியுடன் தொடர்பு.. 'திரிஷ்யம்' பட பாணியில் கொலை செய்து புதைத்த ஜிம் டிரைனர்

Published On 2024-10-28 10:37 GMT   |   Update On 2024-10-28 10:51 GMT
  • கொலையான தினத்தன்று ஏக்தா ஜிம்முக்கு வந்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது.
  • அஜய் தேவ்கான் நடித்த திரிஷ்யம் படத்தை பலமுறை பார்த்தேன்.

உத்தரப் பிரதேசத்தில் நீதிபதி பங்களா அருகே புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கடந்த ஜூன் 24 அன்று சுமார் 4 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன அந்த பெண் தொழிலதிபர் ராகுல் குப்தா என்பவரின் மனைவி ஏக்தா குப்தா [32 வயது] ஆவார்.

அவர் சென்றுகொண்டிருந்த உடற்பயிற்சி நிலையத்தின் ஜிம் டிரைனர் விமல் சோனி என்பவரால் கொலை செய்யப்பட்டதும் அடுத்தகட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. கான்பூர் நகரின் கிரீன் பார்க் பகுதியில் செயல்பட்டு வந்த அந்த ஜிம்முக்கு சென்ற ஏக்தா குப்தா அங்கு டிரைனரான பணிபுரிந்து வந்த விமல் சோனி மீது காதல் வயப்பட்டுள்ளார்.

ஆனால் விமல் சோனிக்கு வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு நடந்ததால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஜூன் 24 அன்று ஜிம்முக்கு வந்த ஏக்தாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது  அவரது கழுத்தில் குத்தியுள்ளார் விமல். தொடர்ந்து அவர் மயங்கி விழவே அவரை கொலையே செய்துள்ளார். கொலையான தினத்தன்று ஏக்தா ஜிம்முக்கு வந்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது.

ஏக்தாவை உடலை அப்பகுதியில் அரசு அதிகாரிகள் குடியிருக்கும் கான்பவுண்ட் பகுதிக்குள் கொண்டு சென்று மாவட்ட நீதிபதி பங்களா அருகே புதைத்துள்ளார். இந்நிலையில் தற்போது விமல் போலீசாரால் விசாரிக்கப்பட்ட நிலையில் உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவந்துள்ளது.

அதாவது, தான் அஜய் தேவ்கான் நடித்த திரிஷ்யம் படத்தை பலமுறை பார்த்ததாகவும் அதில் போலீஸ் ஸ்டேசன் தரைக்கு கீழ் உடலை புதைக்கும் காட்சியை பார்த்து அதுபோல அரசு அதிகாரிகள் இருக்கும் பகுதியில் யாரும் உடலை தேட மாட்டார்கள் என்று கருதி அங்கு புதைத்ததாக விமல் தெரிவித்துள்ளார்.

 

மேலும் அந்த படத்தில் வருவதுபோல் தனது சிம் கார்டுகளையும் அப்புறப்படுத்தியதாகவும் விமல் வாக்குமூலம் அளித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் படம் ஹிந்தியில் அதே பெயரிலும் தமிழில் கமல் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது .

Tags:    

Similar News