இந்தியா

பதவியேற்ற பின் பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம்

Published On 2024-06-11 15:57 GMT   |   Update On 2024-06-11 15:57 GMT
  • இத்தாலியில் வரும் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை ஜி-7 உச்சிமாநாடு நடைபெற உள்ளது.
  • பிரதமர் மோடி ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்த வாரம் இத்தாலி செல்ல இருப்பதாக தகவல் வெளியானது.

புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்தியாவின் பிரதமராக 3-வது முறை நரேந்திர மோடி பதவியேற்றார். அவரது பதவியேற்பு விழா கடந்த 9-ம் தேதி நடைபெற்றது.

இதற்கிடையே, இத்தாலியில் உள்ள அபுலியா பகுதியில் வரும் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை ஜி-7 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொலி வாயிலாக உச்சி மாநாட்டில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்த வாரம் இத்தாலி செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. அவர் வரும் 13-ம் தேதி இத்தாலிக்கு புறப்படுவார். 14-ம் தேதி இந்தியாவிற்கு திரும்புவார் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனாலும், பிரதமரின் பயண திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

Tags:    

Similar News