இந்தியா

தேசிய குழந்தைகள் தினம் - ஒரு பார்வை

Published On 2023-11-14 08:35 GMT   |   Update On 2023-11-14 11:22 GMT
  • நாட்டின் எதிர்காலம் குழந்தைகளிடம் உள்ளதாக பண்டிட் நேரு நம்பினார்
  • 1955ல் நேரு, குழந்தைகள் திரைப்பட சங்கத்தை உருவாக்கினார்

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி வகித்தவர் பண்டிட் ஜவகர்லால் நேரு. 1889 நவம்பர் 14ல் பிறந்த நேரு, 1964 மே 27 அன்று பதவியில் உள்ள போதே மறைந்தார்.

மறைந்த பிரதமர் நேரு, தனது வாழ்நாள் முழுவதும் குழந்தைகள் நலன் மீது பெரிதும் அக்கறை கொண்டிருந்தார். குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களின் உரிமைகள் ஆகியவற்றில்தான் ஒரு சமூகத்தின் அடித்தளமும், ஒரு நாட்டின் எதிர்காலமும் உள்ளதாக தீவிரமாக நம்பியவர் நேரு. தனது ஓய்வு நேரத்தை குழந்தைகளுடன் செலவிடுவதில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார்.

தனது பதவி காலத்தில் 1955ல், குழந்தைகளின் சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த குழந்தைகள் திரைப்பட சங்கத்தை (Children's Film Society) அமைத்தார்.

ஒவ்வொரு வருடமும் அவரது பிறந்த தினமான நவம்பர் 14, இந்தியாவில் "தேசிய குழந்தைகள் தினம்" (National Children's Day) என கொண்டாடப்படுகிறது.

இன்று, நாடெங்கிலும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் குழந்தைகள் தினம் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும். அது மட்டுமின்றி, குழந்தைகளின் நலன், உரிமை மற்றும் திறன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் மற்றும் விளையாட்டுகள் நடத்தப்படும்.

"குழந்தைகள் நமது பொக்கிஷம் மட்டுமல்ல, நமது எதிர்காலமும் கூட. நாம், குழந்தைகளின் களங்கமற்ற அன்பையும் எல்லையற்ற ஆற்றலையும் கொண்டாடுவோம். குழந்தைகள் தின வாழ்த்துக்கள்" என குழந்தைகள் தினம் குறித்து மத்திய கல்வி இயக்குனரகம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளது.

Tags:    

Similar News