நேஷனல் ஹெரால்டு வழக்கு- காங். தலைவர் சிவகுமாரிடம் அமலாக்கத்துறை விசாரணை
- டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிவக்குமார் ஆஜரானார்.
- ராகுல்காந்தி தற்போது தனது யாத்திரையை கர்நாடகாவில் நடத்தி கொண்டிருக்கிறார்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகள் யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார்கள். இவ்வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
இதையடுத்து இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிவக்குமார் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க சிவக்குமார் விடுத்த கோரிக்கையை அமலாக்கத்துறை நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல்காந்தி தற்போது தனது யாத்திரையை கர்நாடகாவில் நடத்தி கொண்டிருக்கிறார். இதில் சிவக்குமார் கலந்து கொண்டிருந்த நிலையில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.