இந்தியா

ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்: விசாரணையை தொடங்கிய என்ஐஏ

Published On 2024-06-10 05:24 GMT   |   Update On 2024-06-10 05:24 GMT
  • தாக்குதலில் காயமடைந்த 33 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

காஷ்மீரில் உள்ள சிவகோரி கோவிலுக்கு பக்தர்கள் சிலர் ஒரு பேருந்தில் நேற்று மாலை சென்று கொண்டிருந்தனர். ரியாசி மாவட்டம் தெரியத் கிராமம் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது டிரைவர் நிலைத்தடுமாறியதில் அந்த பேருந்து, பெரிய பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் முதலில் 10 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த தாக்குதலில் காயமடைந்த 33 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பக்தர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணையை மேற்கொண்டுள்ளது.

சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்துள்ள என்ஐஏ குழுவினர் மற்றும் தடயவியல் குழுவினர் தாக்குதல் நடந்த இடத்தில் ஆதாரங்களை தேடி வருகின்றனர். மேலும் தடயங்களை சேகரித்தனர்.

Tags:    

Similar News