பாண்டியன் கட்சியை பிளவுப்படுத்த முயற்சிக்கிறார் என்பதா?- நவீன் பட்நாயக் காட்டம்
- பாண்டியன் கட்சியை பிளவுப்படுத்த இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
- மாநிலங்களவையில் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக அமித் ஷாவிடம் பட்நாயக் உறுதி அளித்ததாக செய்தி வெளியானது.
ஒடிசா மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பாண்டியன் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். பின்னர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். சமீபத்தில் நடைபெற்ற ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சி மோசமான தோல்வியை சந்தித்தது. இதற்கு பாண்டியன் முக்கிய காரணம் என பிஜு ஜனத தளம் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதற்கிடையே கட்சியை பிரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், மாநிலங்களவையில் பாஜவு-க்கு ஆதரவு இல்லாத நிலையில் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக அமித் ஷாவிடம் நவீன் பட்நாயக் உறுதி அளித்ததாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் பாண்டியன் குறித்த தகவல் முற்றிலும் பொய் என நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான நவீன் பட்நாயக் தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில் "இது முற்றிலும் பொய், அவதூறு, விளைவை ஏற்படுத்தக்கூடியது. நான் முன்னதாக கூறியதுபோல் அதிகாரியாக பணியாற்றிய போதும், கட்சியில் பணியாற்றியபோதும் அர்ப்பணிப்புடனும், திறமையுடனும், நேர்மையுடனும் சேவையாற்றியுள்ளார். அதற்காகவே அறியப்பட்டவர். மதிக்கப்படுகிறார். பாண்டியனுடன் விசயத்தில் அவரை வைத்து விளையாட வேண்டாம் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை கேட்டுக்கொள்கிறேன்" என அதில் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே பிஜு ஜனதா தளம் மாநிலங்களவையில் பாஜக-வுக்கு ஆதரவு கொடுக்கும் என அமித் ஷாவிடம் நவீன் பட்நாயக் உறுதி அளித்ததாக வெளியான செய்தியை பாஜக மறுத்துள்ளது.
இது தொடர்பாக பாஜக துணைத்தலைவர் பிரஞ்சி நாராயன் திரிபாதி "பாஜக பிஜு ஜனதா தளத்திடம் இருந்து உதவி கேட்க வேண்டிய தேவையில்லை. மாநிலத்திலும், மத்தியிலும் மெஜாரிட்டி உள்ளது" என்றார்.