இந்தியா (National)

அரியானா மாநில முதல்வராக நாளை பதவி ஏற்கிறார் நயாப் சிங் சைனி

Published On 2024-10-16 11:25 GMT   |   Update On 2024-10-16 12:36 GMT
  • 48 இடங்களை பிடித்து பா.ஜ.க. தனி மெஜாரிட்டி பெற்றது.
  • 2-வது முறையாக நயாப் சிங் சைனி நாளை முதல்வராக பதவி ஏற்கிறார்.

90 சட்டமன்ற இடங்களை கொண்ட அரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. தொடர்ந்து 3-வது முறையாக பா.ஜ.க. ஆட்சியை பிடித்து சாதனைப் படைத்தது. தற்போது முதல்வராக இருக்கும் நயாப் சிங் சைனி, மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் என பா.ஜ.க. மேலிடம் அறிவித்தது.

இந்த நிலையில் இன்று மாலை நயாப் சிங், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மத்திய மந்திரி மனோகர் லால் கட்டார், அரியானா மாநில பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரான இருந்த மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் ஆளுநர் பண்டாரு தாத்ரேயாவை சந்தித்தனர். அப்போது எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு கடிதத்தை நயாப் சிங் சைனி வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து நாளை அரியானா மாநிலத்தின் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

அரியானா மாநில தேர்தலில் பா.ஜ.க. 48 இடங்களை பிடித்து தனிமெஜாரிட்டி பிடித்தது. காங்கிரஸ் 37 இடங்களில் வெற்றி பெற்றது.

Tags:    

Similar News