கடவுள் ராமர் அசைவம் உண்பவர்: சரத் பவார் கட்சி தலைவர் சர்ச்சை பேச்சு
- 14 ஆண்டுகளாக காட்டில் வசிக்கும் ஒருவர் சைவ உணவுகளை எங்கு தேடுவார்?
- நான் சொல்வது சரியா அல்லது இல்லை?
சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜிதேந்திர அவாத் மகாராஸ்டிரா மாநிலம் ஷீரடியில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது கூறியதாவது:-
கடவுள் ராமர் சைவம் உண்பவர் அல்ல. அவர் அசைவம் உண்பவர். 14 ஆண்டுகளாக காட்டில் வசிக்கும் ஒருவர் சைவ உணவுகளை எங்கு தேடுவார்?. நான் சொல்வது சரியா அல்லது தவறா? (மக்களை நோக்கி கேள்வி கேட்டார்.)
மேலும் யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை. மகாத்மா காந்தி மற்றும் நேரு ஆகியோரால்தான் நாம் சுதந்திரம் பெற்றோம் என்பது உண்மை. இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த மகாத்மா காந்தி ஓபிசி என்பதால் அவர்களால் (ஆர்.எஸ்.எஸ்.) ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை. காந்தியின் படுகொலைக்கு சாதிவெறிதான் உண்மையான காரணம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிற 22-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கும் நிலையில், அவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.