இந்தியா

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: 68 தொகுதிகளில் பா.ஜ.க. போட்டி

Published On 2024-10-18 22:23 GMT   |   Update On 2024-10-18 22:23 GMT
  • தொகுதி பங்கீடு குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
  • ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

ராஞ்சி:

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் நவம்பர் 13 மற்றும் 20 தேதிகளில் இரு கட்டமாக நடைபெற உள்ளது.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஓரணியாக தேர்தலைச் சந்திக்கின்றன. மறுபுறம் பா.ஜ.க, ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் (ஏ.ஜே.எஸ்.யூ.) ஐ.ஜ.த., லோக் ஜனசக்தி (எல்.ஜே.பி.,) ஆகியன ஓரணியாக உள்ளன.

இந்நிலையில், தொகுதி பங்கீடு குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் பாபுலால் மராண்டி, ஏ.ஜே.எஸ்.யூ. தலைவர் சுதேஷ் மஹடோ, ஜார்க்கண்ட் மாநில பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர் மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான், துணை பொறுப்பாளர் அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதன்படி, பா.ஜ.க. 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏ.ஜே.எஸ்.யூ.10 தொகுதிகளிலும், ஐ.ஜ.த. 2 தொகுதிகளிலும், எல்.ஜே.பி. ஒரு தொகுதியிலும் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News