இந்தியா
முதல் மந்திரி நிதிஷ்குமார் லாலு பிரசாத்தை சந்தித்தார்
- முதல் மந்திரி நிதிஷ்குமார் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவை சந்தித்தார்.
- அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். இச்சந்திப்பின் போது லாலுவின் மகன்கள் உடனிருந்தனர்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் பா.ஜ.க உடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் முறித்துக் கொண்டது. இதையடுத்து, ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி வைத்தார் அக்கட்சி தலைவரான நிதிஷ்குமார்.
தொடர்ந்து, பீகார் முதல் மந்திரியாக நிதிஷ்குமாரும், துணை முதல் மந்திரியாக தேஜஸ்வி யாதவும் பதவியேற்றனர்.
இதற்கிடையே, டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த லாலு பிரசாத் யாதவ் வீடு திரும்பினார்.
இந்நிலையில், முதல் மந்திரி நிதிஷ்குமார் நேற்று ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவை சந்தித்துப் பேசினார். அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். இந்தச் சந்திப்பின் போது லாலுவின் மகன்கள் உடனிருந்தனர்.