பா.ஜனதாவுடன் தனது கட்சியை இணைத்தார் ஜனார்த்தன ரெட்டி
- சிபிஐ கைது செய்யப்பட்டதில் இருந்து அரசியல் பணியில் தலையிடாமல் இருந்தார்.
- கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கர்நாடகா மாநிலத்தின் பிரபல அரசியல் தலைவரான ஜி. ஜனார்த்தன ரெட்டி, தனது கே.ஆர்.பி.பி. கட்சியை பா.ஜனதாவுடன் இணைத்துக் கொண்டார்.
சுரங்க மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜி. ஜனார்த்தன ரெட்டி கடந்த வருடம் பா.ஜனதாவில் இருந்து வெளியேறி கல்யாண ராஜ்ய பிரகதி பக்சா (KRPP) என்ற கட்சியை தொடங்கினார். அவர் கடந்த வருடம் நடைபெற்ற சட்டன்ற தேர்தலில் கங்காவதி தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் இன்று தனது கட்சியை பா.ஜனதாவுடன் இணைத்துள்ளார். இந்த இணைப்பு நிகழ்ச்சியில் அவரது மனைவி மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த சில கலந்து கொண்டனர்.
மீண்டும் விட்டிற்கு திரும்பியுள்ளேன் எனத் தெரிவித்துள்ள ஜனார்த்தன ரெட்டி "அமித் ஷா என்னை டெல்லி அழைத்து என்னிடம், பா.ஜனதாவுக்கு கே.ஆர்.பி.பி. வெளியில் இருந்து ஆதரவு என்ற கேள்விக்கே இடமில்லை. அதற்கு பதிலாக பா.ஜனதாவில் இணைந்து பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அதனை நான் ஏற்றுக் கொண்டு கட்சியில் இணைந்துள்ளேன்" என்றார்.
கர்நாடகா மாநில தலைவர் விஜயேந்திரா தலைமையின் கீழ் மற்ற தலைவர்களோடு இணைந்து சாதாரண தொண்டர் போன்று பணியாற்றிவேன். எந்தவொரு நிபந்தனை மற்றும் எதிர்பார்ப்புடன் இங்கு வரவில்லை. எந்தவொரு பொறுப்பு கொடுத்தாலும், அந்த வேலையை நேர்மையாக செய்வேன்.
என்னுடைய ரத்தத்தில் எப்போதும் பா.ஜனதா உள்ளது. ஆனால் சில காரணங்களுக்கான நான் பா.ஜனதாவில் இருந்து வெளியேறினேன். தற்போது மீண்டும் தாய் மடிக்கு திரும்பியதாக உணர்கிறேன். என்னுடைய சகோதரர்கள் இங்கு இருப்பதாக பார்க்கிறேன். 13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பா.ஜனதாவுக்கு திரும்பியதாக நான் பார்க்கவில்லை" என்றார்.
சுமார் 13 வருடங்களுக்கு முன் சுரங்க முறைகேடு வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார். அப்போதில் இருந்து அரசியலில் இருந்து ஒதுங்கிருந்தார். 2018 சட்டமன்ற தேர்தலின்போது தனது நெருங்கிய நண்பரான ஸ்ரீராமுலுக்காக பிரசாரம் மேற்கொண்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களம் இறங்கி எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 2015-ம் ஆண்டு நீதிமன்றம் கடப்பா, அனந்த்புர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.