இந்தியா

கட்சிதாவல் தடை சட்டத்தின்கீழ் தகுதிநீக்கம் செய்யப்பட்டால் எம்.எல்.ஏ.க்களுக்கு ஓய்வூதியம் ரத்து

Published On 2024-09-04 16:07 GMT   |   Update On 2024-09-04 16:07 GMT
  • கடந்தாண்டு கட்சி தாவல் ல் தடை சட்டத்தின்கீழ் 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.
  • எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவுவதை தடுக்கும் விதமாக இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் தகுதிநீக்கம் செய்யப்படும் எம்.எல்.ஏ.க்களுக்கு ஓய்வூதியம் கிடையாது என்று காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலமான இமாச்சலபிரதேசத்தின் சட்டப்பேரவையில் புதிய சட்ட மசோதா நிறைவேற்றப் பட்டுள்ளது.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் 5 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர்களுக்கு பதவிக் காலம் முடிந்த பின்பு மாதம் ரூ.36,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.

இம்மாநிலத்தில் கடந்தாண்டு கட்சி தாவல் ல் தடை சட்டத்தின்கீழ் 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். ஆகவே எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவுவதை தடுக்கும் விதமாக இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News