இந்தியா

ராகுல் காந்திக்கு கடிதம் எழுதிய யாசின் மாலிக் மனைவி: ஆச்சர்யப்படுவதற்கு ஏதுமில்லை என பா.ஜ.க. விமர்சனம்

Published On 2024-11-08 05:13 GMT   |   Update On 2024-11-08 05:18 GMT
  • ராகுல் ஜி, ஒரு நியாயமான வாய்ப்பு கிடைத்தால் யாசின் மாலிக் ஜம்மு-காஷ்மீரில் அமைதிக்கான சக்தியாக இருக்க முடியும்.
  • அமைதி நடவடிக்கைகளில் யாசின் மாலிக்கின் பங்கு முக்கியமானது மற்றும் அவரது அவலநிலை அவசரமாக கவனிக்கப்பட வேண்டும்.

ஜம்மு-காஷ்மீர் மாநில பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக். இவர் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. பயங்கரவாத குழுவுக்கு நிதி திரட்டிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

யாசின் மாலிக்கிற்காக தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி பாராளுமன்றத்தில் விவாதத்தை தெடாங்கவும் என அவரது மனைவி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியதை பா.ஜ.க. விமர்சித்துள்ளது. மேலும், ராகுல் காந்தியின் இதுபோன்ற செயலால் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை என விமர்சித்துள்ளது.

 யாசின் மாலிக் மனைவி ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியது தொடர்பாக பா.ஜ.க. ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா கூறியதாவது:-

ஏன் காங்கிரஸ் எப்போதும் பயங்கரவாதிகளுடன் நிற்கிறது?. பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதி யாசின் மாலிக்கிற்காக பாராளுமன்றத்தில் விவாதத்தை தொடங்குமாறு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு யாசின் மாலிக் மனைவி கடிதம் எழுதியதில் ஆச்சர்யப்படுவதற்கு ஏதுமில்லை.

மாலிக் உள்ளிட்ட பல குற்றவாளிகள் விமானப்படை அதிகாரிகளை காஷ்மீரில் சுட்டுக்கொலை செய்ததற்காக குற்றம்சாட்டப்பட்டவர்கள். இது மாநிலத்திற்கு எதிரான போருக்கு சமமாகும். டாக்டர் மன்மோகன் சிங் அவரது ஆலோசகராக நியமனம் செய்தார். அப்போது டெல்லி ஊடகங்கள் அவரை 'யூத் ஐகான்' என்று அழைத்தன.

இவ்வாறு அமித் மால்வியா தெரிவித்துள்ளார்.

யாசின் மாலிக்கின் மனைவி முஷால் ஹுசைன் முல்லிக் ஆவார். இவர் பாகிஸ்தான் பிரதமரின் மனித உரிமை மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கான முன்னாள் உதவியாளர் ஆவார்.

30 ஆணடுகளுக்கு முன்பாக தேசத்துரோக வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. யாசிக் மாலிக்கிற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியது, தற்போது சிறையில் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அவரது கணவர் யாசிக் மாலிக் உடல்நலம் தொடர்பாக ராகுல் காநதிக்கு முல்லிக் எழுதிய கடிதம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.

காஷ்மீர் பிரிவினைவாத தலைவரான யாசிக் மாலிக், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கில் தனக்கு மரண தண்டனை விதிக்க கோரி என்ஐஏ தாக்கல் செய்த மேல்முறையீட்டை எதிர்த்து தானே டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாதிடுகிறார்.

2017-ல் என்.ஐ.ஏ. யாசிக் மாலிக் உள்ளிட்ட பல்வேறு தனிநபர்கள் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் 2022-ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. அவர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருவதால் உடல்நிலை பாதிப்படைந்துள்ளது.

யாசின் மாலிக் குறித்து அவரது மனைவி ராகுல் காந்திக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

சிறையில் மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாசின் மாலிக் கடந்த 2-ந்தேதியில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்த உண்ணாவிரதப் போராட்டம் அவரது நல்வாழ்வை மேலும் மோசமாக பாதிக்கும் மற்றும் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு, அகிம்சை கொள்கையில் நம்பிக்கை கொண்ட ஒரு மனிதனின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். எனது கணவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவது சித்திரவதைக்கு குறைவில்லை, அவருக்கு நீதி கிடைக்க எங்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்

மேலும் "ராகுல் ஜி, ஒரு நியாயமான வாய்ப்பு கிடைத்தால் யாசின் மாலிக் ஜம்மு-காஷ்மீரில் அமைதிக்கான சக்தியாக இருக்க முடியும். அமைதி நடவடிக்கைகளில் யாசின் மாலிக்கின் பங்கு முக்கியமானது மற்றும் அவரது அவலநிலை அவசரமாக கவனிக்கப்பட வேண்டும்.

ஜம்மு-காஷ்மீரில் இயற்கையான மற்றும் ஒப்பனை அல்லாத அமைதியைக் கொண்டுவருவதற்கான கருவியாக மாறக்கூடிய யாசின் மாலிக் விஷயத்தில் உங்கள் தார்மீக மற்றும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி விவாதத்தைத் தொடங்கவும் என நான் உங்களை (ராகுலை) கேட்டுக்கொள்கிறேன்.

ராகுல் காந்திக்கு எழுதிய கடிதத்தில் யாசின் மாலிக் மனைவி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News