இந்தியா

ஆந்திரா மருந்து நிறுவனத்தில் அணு உலை வெடித்து விபத்து- 15 பேர் உயிரிழப்பு

Published On 2024-08-21 11:45 GMT   |   Update On 2024-08-21 16:25 GMT
  • ஆந்திரா மருந்து நிறுவனத்தில் மதிய உணவு நேரத்தின் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
  • போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட அவசர சேவைகள் சம்பவ இடத்தில் உள்ளன.

ஆந்திர மாநிலம் அச்சுதாபுரம் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் (SEZ) உள்ள Escientia என்கிற மருந்து நிறுவனத்தில் அணு உலை வெடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதிய உணவு நேரத்தின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. அணு உலை வெடித்ததால் அப்பகுதியில் கரும்புகை ஏற்பட்டது.

வெடி விபத்து குறித்து தகவல் தெரியவந்ததை தொடர்ந்த, போலீசார் மற்றும் மீட்பு குழு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது, ஆம்புலன்ஸ்கள் வளாகத்திற்கு நுழைந்தது தெரிந்தது.

இந்த விபத்தில், முதற்கட்ட தகவலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த வெடி விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்திற்கு பிறகு ஆலையின் சுவரும் இடிந்து விழுந்துள்ளது. மீட்புப்பணி தொடர்வதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

படுகாயமடைந்தவர்கள் அனகாபள்ளி என்டிஆர் மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News