இந்தியா

தீபாவளிக்கு பிறகு வாகனங்களில் ஒற்றை- இரட்டை இலக்க திட்டம்: டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர்

Published On 2023-11-06 10:25 GMT   |   Update On 2023-11-06 10:25 GMT
  • டெல்லியில் 1ம் முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டது.
  • 10ம், 12ம் வகுப்புகளை தவிர மற்ற வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் மாலை 4 மணிக்குப் பதிவுசெய்யப்பட்ட 24 மணி நேர சராசரி காற்றுத் தரக் குறியீடு சனிக்கிழமை 415ஆக இருந்து ஞாயிற்றுக்கிழமை 454 ஆக அதிகரித்து மோசமடைந்தது.

இதன் எதிரொலியால், டெல்லியில் 1ம் முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நவம்பர் 11ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம், 12ம் வகுப்புகளை தவிர மற்ற வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வரும் நவம்பர் 13 முதல் 20 வரை டெல்லியில் வாகனங்களில் ஒற்றை- இரட்டை இலக்க திட்டம் அமல்படுத்தப்படும் என்று டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் அறிவித்துள்ளார்.

மேலும், நவம்பர் 20ம் தேதிக்குப் பிறகு இந்தத் திட்டத்தை நீட்டிக்க முடிவு செய்யப்படும் என்றார்.

ஒற்றைப்படை அல்லது இரட்டை எண் தகடுகளின் அடிப்படையில் மாற்று நாட்களில் கார்களை இயக்கப்படுவதே ஒற்றை- இரட்டை இலக்க திட்டம் ஆகும்.

Tags:    

Similar News