இந்தியா

ஒடிசா சபாநாயகர் மற்றும் 2 மந்திரிகள் ராஜினாமா

Published On 2023-05-12 19:22 GMT   |   Update On 2023-05-12 19:22 GMT
  • ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
  • அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், என்னை பொருத்தவரை மூன்றாம் அணிக்கு வாய்ப்பில்லை என்றார்.

புவனேஸ்வர்:

ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், புவனேஸ்வரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை புரிக்கு மாற்றுவது தொடர்பாக பேசியதாகவும் தெரிவித்தார்.

மேலும், என்னை பொருத்தவரை மூன்றாம் அணிக்கு வாய்ப்பில்லை. வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் எந்த எதிர்க்கட்சி தலைவர்களுடனும் பிஜூ ஜனதா தளம் கூட்டணி வைக்காது, தனித்து போட்டியிடும் என தெரிவித்தார்.

இந்நிலையில், ஒடிசா சட்டசபை சபாநாயகராக இருந்துவரும் பைக்ரன் கேசரிஆருக்கா மற்றும் ஸ்ரீகாந்தா சாகு, சமீர் ரஞ்சன் தாஸ் ஆகிய இரு மந்திரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதையடுத்து முதல் மந்திரி நவீன் பட்நாயக் புதிய அமைச்சர்கள் யார் யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்க உள்ளார்.

Tags:    

Similar News