ரத யாத்திரைக்கு தயாராகிறது ஒடிசாவின் பூரி நகரம்
- வருகிற ஜூலை 1-ந்தேதி பூரி ரத யாத்திரை நடைபெறுகிறது.
- ரத யாத்திரைக்கு வரும் பக்தர்கள் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
புவனேஸ்வர்
ஒடிசாவின் புவனேஸ்வரில் ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை புகழ்பெற்றதாகும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள நடக்கும் இந்த ரத யாத்திரையில், கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் மீண்டும் பக்தர்கள் பங்கேற்புடன் வருகிற ஜூலை 1-ந்தேதி பூரி ரத யாத்திரை நடைபெறுகிறது. இதற்கு வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டில் இருந்து 10 லட்சம் பேர் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒடிசாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் ரத யாத்திரைக்கு வரும் பக்தர்கள் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
மேலும், ரெயில், பஸ் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் சுகாதார முகாம்கள் நடத்தப்படும். கொரோனா அறிகுறி உள்ளவர்கள் பூரிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என ஒடிசா சுகாதார சேவைகள் இயக்குனர் பிஜாய் மொகபத்ரா நேற்று தெரிவித்தார்.
பூரியில் கொரோனா சிகிச்சை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.