இந்தியா (National)

ஜம்மு காஷ்மீர் முதல்வரானார் உமர் அப்துல்லா.. பதவியேற்பில் ராகுல் காந்தி பங்கேற்பு

Published On 2024-10-16 06:25 GMT   |   Update On 2024-10-16 07:16 GMT
  • ஜம்மு காஷ்மீரில் 10 வருடங்களுக்குபிறகு அரசு அமைந்துள்ளது
  • தமிழகத்திலிருந்து திமுக சார்பில் கனிமொழி எம்.பி. கலந்துகொள்கிறார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 26 தொகுதிகளுக்கும், 3-வது கட்டமாக 40 தொகுதிகளுக்கும் வாக்கப்பதிவு நடைபெற்றது.

ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 8 ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில் பெரும்பான்மை இடங்களை பிடித்து தேசிய மாநாடு [என்சிபி] மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. தேசிய மாநாடு கட்சி 42 இடங்களிலும் , காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இதற்கிடையே 4 சுயேட்சைகள் மற்றும் 1 இடத்தில் வென்ற ஆம் ஆத்மி என்சிபி கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஜனாதிபதி ஆட்சி திரும்பப்பெறப்பட்டு உமர் அப்துல்லா தலைமையிலான என்சிபி அரசு இன்றைய தினம்  ஆட்சியமைத்துள்ளது.

ஸ்ரீநகரில் உள்ள சேர்-இ-காஷ்மீர் இன்டர்நேஷனல்  கான்வென்டின்  சென்டர்  (SKICC) இல் வைத்து காலை 11.30 மணியளவில் பதவியேற்பு விழா  தொங்கியது. நிலையில் உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீரில் முதல்வராக துணை நிலை ஆளுநர் முன்னிலையில்  பதவியேற்பட்டார். மேலும் ஜம்மு காஷ்மீர் துணை முதல்வராக என்.சி.பி. கட்சியின் முக்கிய தலைவர் சுரேந்தர் குமார் பதவியேற்றார். ஜம்மு காஷ்மீரில் 10 வருடங்களுக்குபிறகு அரசு  அமைத்துள்ளது. உமர் அப்துல்லாவை தொடர்ந்து மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர்.

 

இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் சார்பில் கலந்துகொள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இந்தியா கூட்டணி கட்டியான சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டுள்ளார். தமிழகத்திலிருந்து திமுக சார்பில் கனிமொழி எம்.பி கலந்துகொண்டுள்ளார்.

 

Tags:    

Similar News