இந்தியா

புட்காம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா

Published On 2024-10-22 01:41 GMT   |   Update On 2024-10-22 01:41 GMT
  • புட்காம், கந்தர்பால் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
  • புட்காம் தொகுதியில் சுமார 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பி.டி.பி. வேட்பாளரை தோற்கடித்தார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேசிய மாநாடு கட்சி- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தேசிய மாநாடு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.

அவர் புட்காம் மற்றும் கந்தர்பால் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி பெற்றார். இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஒரு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

அதன்படி உமர் அப்துல்லா புட்காம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த தொகுதியில் மக்கள் ஜனநயாக கட்சியின் அகா சையத் முந்தாஜிர் மெஹ்தியை 18 ஆயிரத்திற்கு 485 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

கந்தர்பால் தொகுதியில் பிடிபி வேட்பாளர் பஷிர் அகமது மிர்-ஐ 10 ஆயிரத்து 574 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

புட்காம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததை தற்காலிய சபாநாயகர் முபாரக் குல் உறுதிப்படுத்தியுள்ளார்.

உமர் அப்துல்லா ஏற்கனவே ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வராக இருந்தவர். அப்போதைய 2009 முதல் 2014 வரையிலான காலக்கட்ட்தில் கந்தர்பால் தொகுதி எம்.எல்.ஏ.-வாக இருந்தார்.

கந்தர்பால் தொகுதியில் அவரது தந்தை பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா தாத்தா ஷேக் அப்துல்லா ஆகியோரும் போட்டியிட்டுள்ளனர்.

கடந்த வாரம் புதன்கிழமை ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வராக உமர் அப்துல்லா பதவி ஏற்றுக் கொண்டார். யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பின் ஜம்மு- காஷ்மீரின் முதல் முதல்வராக உமர் அப்துல்லா பதவி ஏற்றுள்ளார்.

Tags:    

Similar News