இந்தியா

3-வது கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவு: காஷ்மீர் என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

Published On 2024-09-29 16:02 GMT   |   Update On 2024-09-29 16:02 GMT
  • 3-வது கட்ட தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன.
  • பதிவாகும் வாக்குகள் அனைத்தும் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்படும்.

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் செப்டம்பர் 18-ந்தேதியும், 2-வது கட்ட தேர்தல் கடந்த 25-ந்தேதியும் நடைபெற்றது. 3-வது கட்ட தேர்தல் அக்டோபர் 1-ம் தேதி நடைபெறுகிறது. வாக்குகள் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்படும். இதனை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகன சோதனை, கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் உள்ளடங்கிய கிராமம் ஒன்றில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதையடுத்து, அப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். போலீசார் சார்பில் 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனே சிகிச்சைக்காக விமானத்தில் கொண்டு செல்லப்பட்டனர்.

இதுதொடர்பாக, ஜம்முவின் கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த் ஜெயின் கூறுகையில், 3-வது கட்ட தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. பயங்கரவாதியை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் தேர்தலின்போது பயங்கரவாத தாக்குதலோ அல்லது வன்முறையோ நடக்காமல் இருக்கும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News