இந்தியா

பாகிஸ்தான் காதலனுடன் ஆன்லைனில் திருமணம்.. போலி ஆவணங்களுடன் பயணம்.. சிக்கலில் இந்தியப் பெண்

Published On 2024-07-24 12:30 GMT   |   Update On 2024-07-24 12:30 GMT
  • இருவருக்கும் இடையில் காதல் மலரவே தொலைபேசி மூலம் தொடர்ந்து இருவரும் பேசி வந்துள்ளனர்.
  • கடந்த பிப்ரவரி மாதம் பாபரை ஆன்லைனிலேயே சனம் என்ற பெயரில் திருமணம் செய்துள்ளார்

மகாராஷ்டிர மாநிலம் தானே நகரைச் சேர்ந்தவர் நக்மா நூர் மஃஸூத் அலி. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டில் அபோட்டாபாத் [ Abbottabad ] நகரில் வசித்து வரும்பாபர் பஷீர் என்ற நபரை பேஸ்புக்கில் சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையில் காதல் மலரவே தொலைபேசி மூலம் தொடர்ந்து இருவரும் பேசி வந்துள்ளனர்.

காதலர் பாபரை சந்திக்க நக்மா விண்ணப்பித்திருந்த பாகிஸ்தான் விசா நிராகரிக்கப்பட்ட நிலையில் தனது ஆதார் கார்டில் சனம் கான் ரூக் என பெயரை மாற்றி கடந்த பிப்ரவரி மாதம் பாபரை ஆன்லைனிலேயே சனம் என்ற பெயரில் திருமணம் செய்துள்ளார் நக்மா. அதைத்தொடர்ந்து போலியான ஆவணங்களைத் தயாரித்து அதன்மூலம் தற்போது பாகிஸ்தான் சென்று திரும்பியுள்ளார் அவர்.

கடந்த ஜூலை 17 ஆம் தேதி நக்மா நாடு திரும்பிய நிலையில் அவரது போலி ஆவணங்கள் மூலம் போலீசில சிக்கியுள்ளார் நக்மா. இதனையடுத்து நக்மாவை போலீசார் விசாரித்து வருகின்றனர். தனது மகள் அவளது பெயரை கடந்த 2015 ஆம் ஆண்டே மாற்றிவிட்டதாக நக்மாவின் தாய் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News