உறுதியாக ஆட்சிக்கு வர முடியாது என்ற கட்சிதான் அதிகமான வாக்குறுதிகளை வழங்கும்: தேவேகவுடா
- காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது.
- பா.ஜனதா விமர்சித்து வரும் நிலையில், இதுதான் எங்கள் கதாநாயகன் என இந்தியா கூட்டணி தெரிவித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. கடந்த முறை 28 இடங்களில் 26 இடங்களை பா.ஜனதா கைப்பற்றியது. இந்த முறை அம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளது.
தற்போது மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் பல சலுகைகள் தொடர்பான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது. இது தங்களுக்கு சாதமாக அமையும் என இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் நம்புகின்றன.
கர்நாடகா மாநிலத்தில் பா.ஜனதா மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கர்நாடகா மாநில முதல்வருமான சித்தராமையா மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் மதசார்பற்ற கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் "உறுதியாக ஆட்சிக்கு வர முடியாத என்ற கட்சியால் மட்டுமே இவ்வறு வாக்குறுதிகளை அளிக்க முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.