இந்தியா

பீப் வைத்திருந்ததாக கூறி முதியவரை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - அஜித் பவார்

Published On 2024-09-01 07:51 GMT   |   Update On 2024-09-01 07:51 GMT
  • மகாராஷ்டிராவில் முதியவர் தனது மகளுடன் எக்பிரஸ் ரெயிலில் சாதாரண பெட்டியில் சென்று கொண்டிருந்தார்.
  • சக பயணிகள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியும், கன்னத்தில் அறைந்தும் சரமாரியாக தாக்கினர்.

மகாராஷ்டிராவில் ரெயிலில் மாட்டிறைச்சி எடுத்து வந்ததாக முதியவரை சக பயணிகள் சரமாரியாகத் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இருந்து கல்யாண் நகருக்கு ஹாஜி அஸ்ரப் முன்யார் என்ற முதியவர் தனது மகளுடன் எக்பிரஸ் ரெயிலில் சாதரண பெட்டியில் சென்று கொண்டிருந்தார்.

அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் ஜாடியில் இறைச்சித் துண்டுகள் இருந்ததாகத் தெரிகிறது. அது மாட்டிறைச்சி என்று குற்றம் சாட்டிய சக பயணிகள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியும், கன்னத்தில் அறைந்தும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்போம் என்று ரெயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், "2 நாட்களுக்கு முன்பு இகத்புரி பகுதியில் ரயில் பயணத்தின் போது முதியவர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீஸ் அதிகாரிகளுடன் நான் தொடர்பு கொண்டு பேசினேன். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். இத்தகைய சமூக விரோதிகளுக்கு நமது அரசிடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்காது" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News