இந்தியா

ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் குண்டுகட்டாக வெளியேற்றம்- வீடியோ

Published On 2024-11-08 05:33 GMT   |   Update On 2024-11-08 05:33 GMT
  • சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர தீர்மானம்.
  • பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளி.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் முடிவடைந்து முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.-க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மக்களவை எம்.பி.யான இன்ஜினீயர் ரஷித்தின் சகோதரர் குர்ஷித் அகமது ஷேக் 370 சட்டப்பிரிவுக்கு ஆதரவான பேனரை சட்டமன்றத்திற்குள் கொண்டு வந்து காண்பித்தார்.

இதற்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.-க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளில் ஈடுபட எம்.எல்.ஏ.-வுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவையை நாள் முழுவதும் சபாநாயகர் ஒத்திவைத்தார்.

இந்த நிலையில் இன்று காலை சட்டசபை கூடியது. இன்றும் 370 சட்டப்பிரிவு தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அமளில் ஈடுபட்டனர். அப்போது அவாமி கட்சி எம்.எல்.ஏ.-க்களுக்கும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையில் மோதல் ஏற்படும் நிலை உருவானது.

இதனால் சபாநாயகர் அப்துல் ரஹிம் ராதர், பாதுகாவலர்களை அழைத்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற உத்தரவிட்டார். எம்.எல்.ஏ.-க்கள் வெளியே மறுப்பு தெரிவித்ததால் குண்டுகட்டாக தூக்கி அவையில் இருந்து அப்புறப்படுத்தினர். 

Tags:    

Similar News